/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு
/
கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு
கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு
கள்ளக்குறிச்சியில் டிச.,17ல் ஓய்வூதியர் குறை கேட்பு
ADDED : நவ 20, 2024 06:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி அரசுத் துறைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கான குறைகள் கேட்புக் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்பிரசாந்த் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் அரசுத்துறைகளில் ஓய்வுபெற்றவர்களுக்கான குறைகள் கேட்புக் கூட்டம் வரும் டிச., 17ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை ஓய்வூதியர்கள் குறைத்தீர்க்கும் நாள் மனு' என குறிப்பிட்டு வரும் டிச., 5ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.