ADDED : நவ 18, 2024 08:01 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அப்பு தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி, மருத்துவப்படி மற்றும் மருத்து காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அரசு பஸ்களில் கட்டணமில்லா சலுகை அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள் கமலா, மாரியப்பன், கலா கமலம், முனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.