sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முதல்வர் அறிவிப்பில் திருக்கோவிலுார் 'மிஸ்சிங்' வளர்ச்சி திட்டம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

/

 முதல்வர் அறிவிப்பில் திருக்கோவிலுார் 'மிஸ்சிங்' வளர்ச்சி திட்டம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

 முதல்வர் அறிவிப்பில் திருக்கோவிலுார் 'மிஸ்சிங்' வளர்ச்சி திட்டம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

 முதல்வர் அறிவிப்பில் திருக்கோவிலுார் 'மிஸ்சிங்' வளர்ச்சி திட்டம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்


ADDED : டிச 28, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், திருக்கோவிலுாருக்கான எந்தவித அறிவிப்பும் வெளியாடாதது 20 ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடையில் திருக்கோவிலுார் இருப்பதால் இது எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று மக்களுக்கு மட்டுமல்ல சில சமயம் அதிகாரிகளுக்கு கூட சந்தேகமாக இருக்கிறது.

திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தாலும், திருக்கோவிலுார் தொகுதி என்பதால் தேர்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை அணுக வேண்டி உள்ளது.

இரண்டு மாவட்டங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் திருக்கோவிலுாரின் வளர்ச்சி பணி திட்டத்தில் தொடர்ந்து தோய்வு நிலைதான் நீடித்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, 2,559 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டத்திற்கான 8 வளர்ச்சி பணி திட்டங்களை அறிவித்தார்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கோவிலுார் உள்ளிட்ட 20 ஊராட்சிகளுக்கான திட்டப் பணிகள் ஏதுமில்லை.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இருக்கும் திருக்கோவிலுார் அரசு கலைக்கல்லுாரி, ஆர்.டி.ஓ., அலுவலகம், 54 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனை ஆகியவற்றின் பணிகளை நிறைவு செய்து திறந்திருக்கலாம்.

தரைப்பாளத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்ட நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தி இருக்கலாம்.

இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக அறிவிக்கப்பட்ட 8 புதிய அறிவிப்புகளிலும் திருக்கோவிலுார் பகுதிக்கான எந்த அறிவிப்பும் இடம் பெறாதது திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

திருக்கோவிலுார் புதிய பஸ் நிலையம் அறிவிக்கப்பட்ட அதே தேதியில் தான் கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்திற்கான அறிவிப்பும் வெளியானது.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், திருக்கோவிலுார் பஸ் நிலையத்திற்கான பணிகள் துவங்காமல் உள்ளது.

இரண்டு மாவட்டத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் திருக்கோவிலுாரின் வளர்ச்சி பணி திட்டம் குறித்து முதல்வர் அறிவிக்காதது அப்பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை அளித்து உள்ளது.






      Dinamalar
      Follow us