/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
/
கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவு துர்நாற்றத்தால் மக்கள் அவதி
ADDED : செப் 09, 2025 06:27 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்து விடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் உள்ளே செல்லும் நுழைவு வாயில் பகுதியில் குடியிருப்புகள், கடைகள் மற்றும் ஓட்டல் களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கான கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடத்திற்கு அருகே இரவு நேரத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்து விடப்படுகிறது.
செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்துவிடும்போது, கடும் துர்நாற்றம் எழுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பழைய மாரியம்மன் கோவில் பகுதி குடியிருப்புகளுக்கு இடையே செல்லும் கழிவு நீர் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு வாசிகள் அவதி அடைகின்றனர். எனவே, கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து விடுவதை தடுப்பதற்கும், குடியிருப்புகளுக்கு இடையே கால்வாயை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.