/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலைகளை மறித்து நடத்தும் கூட்டங்கள் திருக்கோவிலுாரில் மக்கள் அவதி
/
சாலைகளை மறித்து நடத்தும் கூட்டங்கள் திருக்கோவிலுாரில் மக்கள் அவதி
சாலைகளை மறித்து நடத்தும் கூட்டங்கள் திருக்கோவிலுாரில் மக்கள் அவதி
சாலைகளை மறித்து நடத்தும் கூட்டங்கள் திருக்கோவிலுாரில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 19, 2025 01:10 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சாலையை அடைத்து பொதுக்கூட்டம் போடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மார்க்கெட் வீதியில் கூட்டம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுார் பேரூராட்சியாக இருந்தபோது, நகரத்தின் மத்தியில் மார்க்கெட் வீதியில், நிரந்தர மேடை அமைக்கப்பட்டு இந்திரா காந்தி நினைவு பொதுக் கூட்ட மேடை எனப் பெயரிடப்பட்டது. அதன் பிறகு கட்சிகளின் பொதுக்கூட்டம் என்றால் இந்த மேடையில் நடத்த போலீசார் அனுமதி வழங்குவது வழக்கம். தற்போது இந்த மேடையில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் என யாரும் கூட்டங்கள் நடத்துவதில்லை. மாறாக பஸ் நிலையம் எதிரிலும், 5 முனை சந்திப்பிலும் சாலையை மறித்து மேடை அமைத்து கூட்டம் நடத்துகின்றனர்.
இந்திரா காந்தி நினைவு பொதுக் கூட்ட மேடை சுத்தம் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தனியாக ஆட்களை நியமித்து பராமரிப்பு பணி மட்டும் செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளை அடைத்து பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பு இருந்தும், இங்கு அனுமதி வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நகரில் எங்கு வேண்டுமானாலும் சாலையை மறித்து பொதுக் கூட்டம் நடத்துவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருவாய்த்துறை காவல்துறை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்கெட் வீதியில் உள்ள பொதுக்கூட்ட மேடையை சற்று விரிவுபடுத்தி, பொதுக் கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.