/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் உளுந்துார்பேட்டையில் குவிந்த மக்கள்

ADDED : ஜன 04, 2024 06:12 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் மனுக்களை கொடுப்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர்.
உளுந்துார்பேட்டையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் உளுந்துார்பேட்டை நகராட்சியில் 1, 2, 3, 10, 11, 12, 13, 20, 21, 22, 23, 24 ஆகிய வார்டு பகுதிகளுக்கு மட்டும் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை சேர்மன் வைத்தியநாதன் வரவேற்றார். எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.
உளுந்துார்பேட்டை தாசில்தார் விஜயபிரபாகரன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், டேனியல்ராஜ், சாந்தி மதியழகன், ராஜேஸ்வரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் மனுக்கள் கொடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
முகாமில் 742 பேர் மனுக்களை வழங்கினர். நெட்வொர்க் கிடைக்காததால் மனுக்கள் வாங்கிய அதிகாரிகள் திணறினர். இருப்பினும் மனுக்களைபெற்ற அதிகாரிகள் பதிவேட்டில் பதிவு செய்தனர்.