/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
ADDED : பிப் 15, 2024 11:55 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு காணப்படாத மனுதாரர்கள் மற்றும் மனு மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்வு முகாமில், 11 மனுதாரர்களிடம் நேரடியாக விசாரணை செய்யப்பட்டது. அதில், 10 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஒரு மனுதாரரின் மனு விசாரணையில் உள்ளது.
பொதுமக்களிடமிருந்து 30 புகார் மனுக்கள் புதிதாக பெறப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் ரமேஷ், குகன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.