/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்கள் நலப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
மக்கள் நலப் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 06:15 AM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி ராஜராஜசோழன் தலைமை தாங்கினார். கருணாநிதி, இதையத்துல்லா, ராஜேந்திரன், முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்ரமணி வரவேற்றார். நிர்வாகிகள் கருணாநிதி, வெங்கடேசன், வைத்தி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். இதில், பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு முதல் இறந்த மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரூ.5 லட்சம் நிவாரண தொகை, வாரிசுகளுக்கு வலை வழங்க வேண்டும். பணியிடம் மாறுதல் மற்றும் ஒரே இடத்தில் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மக்கள் நலப் பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.