/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு
/
பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு
பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு
பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி மக்கள் மனு
ADDED : டிச 16, 2024 11:08 PM

கள்ளக்குறிச்சி; வாணாபுரம் அடுத்த பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ் விடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விபரம்:
பொற்பாலம்பட்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராம மக்கள் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கள்ளக்குறிச்சிக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், எங்கள் கிராமத்தில் அரசு பஸ் வசதி இல்லை.
கள்ளக்குறிச்சி - பகண்டை கூட்ரோடு செல்லும் அரசு பஸ்கள், எங்கள் கிராமத்தை தவிர்த்து மற்ற கிராமங்களுக்கு செல்கிறது.
எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள், மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு, சங்கராபுரம், திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பொற்பாலம்பட்டு கிராமத்திற்கு அரசு பஸ்கள் வந்து செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

