/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியநாயகி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா
/
பெரியநாயகி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா
ADDED : மார் 18, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் நகராட்சி பம்ப் ஹவுசில் அமைந்துள்ள வல்லப லிங்கேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா நடந்தது.
பக்தர்கள் கஞ்சூள்ளி கபாலம் அணிந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வீதியுலாவில் பங்கேற்றனர். மாலை 4:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

