/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியசிறுவத்துார் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
/
பெரியசிறுவத்துார் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
பெரியசிறுவத்துார் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
பெரியசிறுவத்துார் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி
ADDED : டிச 25, 2024 10:49 PM

கள்ளக்குறிச்சி; பெரியசிறுவத்தார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநில அளவிலான கைபந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே குழு மற்றும் தடகளம் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்துார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் கைபந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, விநாயகா மெட்ரிக் பள்ளி முதல்வர் விவேகானந்தன், உடற்கல்வி ஆசிரியர் தினகரன் மற்றும் ஆசிரியர்கள் பலர் பாராட்டி வாழ்த்தினர். இம்மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.