/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்: போலீஸ் அறிவுறுத்தல்
/
அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்: போலீஸ் அறிவுறுத்தல்
அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்: போலீஸ் அறிவுறுத்தல்
அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்: போலீஸ் அறிவுறுத்தல்
ADDED : ஆக 20, 2025 10:53 PM

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்று போலீஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. கள்ளக்குறிச்சி போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம், தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம் பகுதிகளில் சிலை வைத்து வழிபடுவது சம்பந்தமாக சிலை அமைப்பு குழுவினருடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
டி.எஸ்.பி., தங்கவேல் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், ஏழுமலை, சப்இன்ஸ்பெக்டர்கள் பரிமளா, மணிகண்டன், சந்திரன், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போலீஸ், வருவாய், மின்சாரம், தீயணைப்பு துறைளின் வழிகாட்டுதலின் படி அனுமதி பெற்று சிலைகள் வைத்து வழிபட வேண்டும். சிலை உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்படும் இடம், கரைக்கப்படும் இடம், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க கூடாது.
கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்தாண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். இதர வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகில் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. பூஜை நேரங்களில் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகளை 3 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்து விட வேண்டும். மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஏற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது பிற மதத்தினர் வழிபடும் தலங்களின் அருகில் செல்லும்போது மேள, தாளங்கள் வாசிக்கக்கூடாது.
கச்சிராயபாளையம் கோமுகி அணை, சின்னசேலம் ஏரி, திருக்கோவிலுார் மான்குட்டை மற்றும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விழா குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.