/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டுகோள்
/
மாற்றுத்திறனாளிகள் தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகள் தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டுகோள்
மாற்றுத்திறனாளிகள் தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்க வேண்டுகோள்
ADDED : ஜன 09, 2024 01:14 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பதிவுக்காக கணக்கெடுக்க வரும் களப்பணியாளர்களிடம் தகவலை தயக்கமின்றி முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உரிமைகள் திட்டத்தின்கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனங்களின் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படுகிறது.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளும் குடும்ப உறுப்பினர்களும் தங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.