/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
/
கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
ADDED : ஏப் 09, 2025 11:00 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கடந்த 4ம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று முன்தினம் நடந்தது.
காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதி உலா தங்க பல்லக்கில் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
இரவு 9:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் , வரும் 12ம் தேதி காலை நடக்கிறது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார், கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.