/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செஞ்சிக்குப்பம் மக்கள் பட்டா கேட்டு மனு
/
செஞ்சிக்குப்பம் மக்கள் பட்டா கேட்டு மனு
ADDED : செப் 30, 2025 08:07 AM

கள்ளக்குறிச்சி: செஞ்சிக்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, செஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; செஞ்சிக்குப்பம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த 25 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக பி.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். விரிவாக்க பணிக்காக நாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடத்தை தவிர வேறு பகுதியில் எங்களுக்கு இடமில்லை. தற்போதுள்ள இடத்தை காலி செய்தால் குடும்பத்தினருடன் எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கிறோம். எனவே, தற்போது உள்ள இடத்திற்கு பதிலாக, செஞ்சிக்குப்பம் எல்லையில் உள்ள தரிசு நிலத்தை எங்களுக்கு வழங்கி, பட்டா அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.