தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பழங்குடியினர் சான்றிதழ்ரத்து செய்யக்கோரி மனு

பழங்குடியினர் சான்றிதழ்ரத்து செய்யக்கோரி மனு

பழங்குடியினர் சான்றிதழ்ரத்து செய்யக்கோரி மனு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சீர்பாதநல்லுாரில், சிலர் முறைகேடாக பெற்ற பழங்குடியினர் சான்றிதழை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சீர்பாதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சீர்பாதநல்லுார் கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் பலர் வசிக்கின்றனர். இதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர், விதிகளை மீறி பழங்குடியினர் சான்றிதழை பெற்றுள்ளனர். அரசின் சலுகைகளை பெறுவதற்காக முறைகேடு செய்து, பழங்குடியினர் சான்றிதழை அவர்கள் பெற்றுள்ளனர். சீர்பாதநல்லுாரில், பழங்குடியின சமுதாய மக்கள் வசிக்கவில்லை. எனவே, உரிய விசாரணை செய்து, முறைகேடாக பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us