/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
/
வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
ADDED : செப் 25, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : பெத்தாசமுத்திரம் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
பெத்தாசமுத்திரம் கிராம மக்கள் அளித்த மனுவில்; சின்னசேலம் அடுத்த பெத்தாசமுத்திரம் அண்ணா நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கடந்த 1977ம் ஆண்டு முதல் வீட்டுவரி கட்டி வருகிறோம். அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பல ஆண்டுகளாக குடியிருந்து வருவோர்க்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.