/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரவழைக்க வேண்டி மனு
/
நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரவழைக்க வேண்டி மனு
ADDED : டிச 23, 2024 10:49 PM

கள்ளக்குறிச்சி:நைனார்பாளையம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடைந்த மதகு ெஷட்டரை சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையம் விவசாயிகள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:
நைனார்பாளையத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான நல்லான் பிள்ளை பெற்றால் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் தோட்டப்பாடி ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் வனப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக நல்லான் பிள்ளை பெற்றால் ஏரிக்கு வரும்.
இந்த நீர்வரத்து கால்வாயில் உள்ள பழமை வாய்ந்த மதகு ெஷட்டர் உடைந்துள்ளது. மேலும், நீர் வரத்து கால்வாய் பகுதியை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த மழையால் தோட்டப்பாடி ஏரி நிரம்பிய நிலையில், உபரி நீர் உடைந்த ெஷட்டர் வழியாக மணிமுக்தா ஆறுக்கு சென்று வீணாகிறது. இதனால் கோடைக்காலத்தில் நைனார்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, உடைந்த மதகு ெஷட்டரை சரிசெய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.