/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குடியுரிமை பட்டா இடத்தை மீட்டு தரக்கோரி மனு
/
குடியுரிமை பட்டா இடத்தை மீட்டு தரக்கோரி மனு
ADDED : ஏப் 09, 2025 07:30 AM

கள்ளக்குறிச்சி : அம்மையகரத்தில் ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டிற்காக பட்டா வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:
கடந்த 1996ம் ஆண்டு குடியிருக்க இடம் இல்லாமல் தவிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்காக, அம்மையகரம் சமத்துவபுரத்தில் குடியுரிமை பட்டாவை தமிழக அரசு வழங்கியது. ஆனால் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை அதிகாரிகள் காண்பிக்கவே இல்லை.
இது குறித்து கேட்டதற்கு, அம்மையகரத்தில் உள்ள ஆழமான இடத்தை காண்பித்தனர். எங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து விவசாயிகள் மண் தோண்டி எடுத்து, விளைநிலத்திற்கு பயன்படுத்துகின்றனர். மேலும், இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
இது குறித்து வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஆதிதிராவிட சமுதாய மக்களுக்காக வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.