/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூவாகம் நிகழ்ச்சி கலெக்டரிடம் மனு
/
கூவாகம் நிகழ்ச்சி கலெக்டரிடம் மனு
ADDED : ஏப் 11, 2025 06:18 AM

கள்ளக்குறிச்சி: கூவாக்தில் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருக்கோவிலுார் அடுத்த சந்தப்பேட்டை சேர்ந்த திருநங்கை ரோஸ்வின், ஜியோ உள்ளிட்டோர் கலெக்டர் பிரசாந்திடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது;
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாளை மறுதினம் மற்றும் வரும், 14 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கூவாகம் கிராமத்தில் முதல் முறையாக ஊராட்சி தலைவர், கிராம முக்கியதஸ்கர்கள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து, வரும் 13ம் தேதி மிஸ் கூவாகம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாங்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

