/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தார் சாலை சீரமைக்க கலெக்டரிடம் மனு
/
தார் சாலை சீரமைக்க கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 29, 2025 07:19 AM
கள்ளக்குறிச்சி: குன்னியூரில் இருந்து உதயமாம்பட்டு வரையிலான தார் சாலையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தியாகதுருகத்தை சேர்ந்த ராமலிங்கம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
அதையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களிலும் தியாகதுருகத்திற்கு செல்கின்றனர்.
இதில், குன்னியூரில் இருந்து உதயமாம்பட்டு வரையிலான 2 கி.மீ., தார் சாலை படுமோசமாக இருப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பயணிக்க முடியாத நிலையில் தார் சாலை இருப்பதால் சிரமமாக உள்ளது.
எனவே, குன்னியூர் - உதயமாம்பட்டு வரையிலான சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.