/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்க மேலாண் இயக்குனரிடம் மனு
/
மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்க மேலாண் இயக்குனரிடம் மனு
மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்க மேலாண் இயக்குனரிடம் மனு
மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்க மேலாண் இயக்குனரிடம் மனு
ADDED : ஆக 04, 2025 01:32 AM

கள்ளக்குறிச்சி : அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி தலைமையில், மாநில துணைத்தல ைவர் ராதாகிருஷ்ணன், கடலுார் மண்டல பொதுச்செயலாளர் ராஜேஷ் ஆகியோர் அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும், அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணைப்படி, தகுதி மாற்றி தொடர் பணி வழங்குதல், மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு உதவிகள் வழங்குவதை உறுதிப்படுத்துதல், டாக்டர் நிரந்தர ஊனம் என சான்றிதழ் கொடுத்தும் நிர்வாகம் மீண்டும், மீண்டும் மெடிக்கல் போர்டுக்கு அனுப்புவதை நிறுத்துதல், மாற்றுத்திறனாளிகளின் உடல் தகுதிக்கேற்ப பணி வழங்வேண்டும்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிச., 3) அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் உட்பட 10 கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கோட்ட மேலாண் இயக்குனர், விழுப்புரம் கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அலுவலர் நியமிப்பதாக உறுதி அளித்தார். அப்போது மண்டல தலைவர் வேலு, பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மாரிமுத்து மற்றும் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், வேலுார் ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உடனிருந்தனர்.