/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சீர்வரிசை தட்டுடன் தாசில்தாரிடம் மனு
/
சீர்வரிசை தட்டுடன் தாசில்தாரிடம் மனு
ADDED : ஏப் 04, 2025 04:46 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் தாசில்தாரிடம் சீர்வரிசை தட்டுடன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடையானந்தல், டி.ஒரத்தூர், பா. கிள்ளனுர் கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை, கணினி சிட்டாவாக பதிவேற்றம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூ., வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அக்கட்சி நிர்வாகிகள், சீர்வரிசை தட்டுடன் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
ஒன்றிய செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி, பொருளாளர் வெங்கடேசன், தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீசார் தாலுகா அலுவலக நுழைவாயில் முன், அவர்களை தடுத்து நிறுத்தி சீர்வரிசை தட்டுகளை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல அனுமதித்தினர். தொடர்ந்து இந்திய கம்யூ., கட்சியினருடன் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.

