/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்கள் மாலையுடன் மனு
/
குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்கள் மாலையுடன் மனு
குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்கள் மாலையுடன் மனு
குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்கள் மாலையுடன் மனு
ADDED : ஆக 18, 2025 11:34 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு, நுாதன முறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பின் மாநில துணை பொதுச் செயலாளர் குப்பன், கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு, நுாதன முறையில் அலுவலர்களிடம் மனு அளித்தார்.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் திருக்கோவிலுார் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊரில் அதே ஊராட்சி சேர்ந்தவர்கள் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
ஊராட்சி செயலர்களை சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களை பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.