/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
மருந்து வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : டிச 01, 2024 05:05 AM
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மருந்து வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று 1ம் தேதி நடக்கிறது.
சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில், மருந்து வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இன்று 1ம் தேதி காலை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் முத்து கருப்பன் வரவேற்கிறார். மாவட்ட புதிய நிர்வாகிகள் விஜயகுமார், மதியழகன், முத்துக்கருப்பன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் துரை, துணை தலைவர் சங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.