
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், 186வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.
நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் தமிழ்வாணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, புகைப்பட கலைஞர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சங்க அமைப்பாளர் பிரபு, கவுரவ தலைவர் கந்தசாமி, துணைத் தலைவர் வெங்கட், ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.