/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் தேச தலைவர்கள் புகைப்படம் கிழிப்பு: போலீஸ் விசாரணை
/
அரசு பள்ளியில் தேச தலைவர்கள் புகைப்படம் கிழிப்பு: போலீஸ் விசாரணை
அரசு பள்ளியில் தேச தலைவர்கள் புகைப்படம் கிழிப்பு: போலீஸ் விசாரணை
அரசு பள்ளியில் தேச தலைவர்கள் புகைப்படம் கிழிப்பு: போலீஸ் விசாரணை
ADDED : பிப் 21, 2024 11:17 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் தேச தலைவர்களின் புகைப்படம் கிழித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் உள்ள கிரில் கேட்டின் மேற்புறத்தில் காந்தி, காமராஜர், அம்பேத்கர், பெரியார், அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தேச தலைவர்கள் புகைப்படம் அடங்கிய சிறிய அளவிலான டிஜிட்டல் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்றபோது, ஒரு சில தேச தலைவர்களின் புகைப்படம் கிழிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பள்ளி வளாகத்தில் மதுபாட்டில் உடைத்து சிதறி கிடந்தது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ் மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பள்ளியில் தேச தலைவரின் புகைப்படத்தை கிழித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மலைக்கோட்டாலம் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வரஞ்சரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.