/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆஞ்சியோ சிகிச்சையில் முன்னோடி ராஜு இதயம் - தோல் மருத்துவமனை
/
ஆஞ்சியோ சிகிச்சையில் முன்னோடி ராஜு இதயம் - தோல் மருத்துவமனை
ஆஞ்சியோ சிகிச்சையில் முன்னோடி ராஜு இதயம் - தோல் மருத்துவமனை
ஆஞ்சியோ சிகிச்சையில் முன்னோடி ராஜு இதயம் - தோல் மருத்துவமனை
ADDED : பிப் 15, 2024 11:39 PM

கள்ளக்குறிச்சியில் ராஜு இதயம் - மற்றும் தோல் மருத்துவமனை, இதுவரை 2,000க்கும் மேற்பட்ட ஆஞ்சியோ இருதய சிகிச்சை வெற்றிகரமாக செய்து மாவட்டத்தின் முன்னோடியாக சாதனை படைத்து வருகிறது.
கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் ராஜு இதயம் மற்றும் தோல் மருத்துவமனை 'கேத் லேப்' வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
மருத்துமனையின் சிறப்புகள் குறித்து இருதய சிகிச்சை நிபுணர் பாபுசக்கரவர்த்தி கூறியதாவது:
இருதய சிகிச்சையில் 16 ஆண்டுகால அனுபவம் மூலமாக பை-பாஸ் அறுவை சிகிச்சையின்றி நுண்துளை மூலம் 2,000க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை, இதய துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் பொருத்துதல் உள்ளிட்ட சிகிச்சைகள் மூலமாக நம் மருத்துவமனையில் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இங்கு இதய நலன் குறித்து அளவீடுகளை கண்டறிய மாஸ்டர் கார்டியாக் செக்கப் வசதி உள்ளது.
இ.சி.ஜி., எக்கோ, டிரெட்மில் டெஸ்ட், ஹோல்டர் மானிடரிங், ஆம்புலேட்டரி ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட ரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
மாரடைப்புக்கான 24 மணி நேர உடனடி தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது.
முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதய சிகிச்சையில் மாவட்டத்தின் முன்னோடி மருத்துவமனையாக ராஜு மருத்துவமனை சிறப்பு பெற்றுள்ளது.
அத்துடன், தோல் மருத்துவத்தில்,15 ஆண்டுகால அனுபவம் கொண்ட மூத்த தோல் மருத்துவரான டாக்டர் இந்துபாலா, எப்.டி.ஏ., தரச்சான்றிதழ் பெற்ற அதிநவீன லேசர் சிகிச்சை முறையை நம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தேவையற்ற ரோமங்களை நிரந்தரமாக குறைத்தல், கரும்புள்ளி, பரு தழும்பிற்கு சிறப்பு லேசர் சிகிச்சை, பருக்களுக்கு பீல் சிகிச்சை, முகப்பொலிவிற்கு ஹைட்ரோ பேசியல், மச்சம், மரு அகற்றுதல், விடிலிகோ மற்றும் சோரியாசிஸ்க்கான போட்டோதெரபி, முடி உதிர்வுக்கான பிஆர்.பி., போன்ற அதிநவீன காஸ்மெட்டாலஜி சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் அதிநவீன சிகிச்சை அளிப்பதையே, கள்ளக்குறிச்சி ராஜு இதயம் மற்றும் தோல் மருத்துவமனையின் முக்கிய நோக்கம் என, டாக்டர் பாபுசக்கரவர்த்தி தெரிவித்தார்.