/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய கலெக்டர் அலுவலகத்தை செப்டம்பரில் திறக்க திட்டம்
/
புதிய கலெக்டர் அலுவலகத்தை செப்டம்பரில் திறக்க திட்டம்
புதிய கலெக்டர் அலுவலகத்தை செப்டம்பரில் திறக்க திட்டம்
புதிய கலெக்டர் அலுவலகத்தை செப்டம்பரில் திறக்க திட்டம்
ADDED : ஏப் 13, 2025 06:45 AM

கள்ளக்குறிச்சி : வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலகத்தை வரும் செப்., மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் வேலு தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.139.41 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
தரைத்தளத்துடன் கூடிய, 7 மாடி கட்டடத்தில் கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் மாவட்ட அரசு அலுவலகங்கள், 600 பேர் அமரும் வகையில் கூட்டரங்கம், வங்கி, தபால் அலுவலகம், இ சேவை மையம், காணொளி காட்சி கலந்தாய்வு அரங்கம், பாஸ்போர்ட் அலுவலகம், தீயணைப்பு அறை, உடற்பயிற்சிக்கூடம், மின்சாதன அறை உள்ளிட்டவைகளுடன் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த செப்., மாதத்தில், முதல்வர் ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.'டோல்கேட்' தவிர்க்க முடியாத ஒன்றாக மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. அதனால் 'டோல்கேட்'டிற்கு கால அவகாச முடிவு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வில் அரசு செயலாளர் ஜெயகாந்தன், கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மலையரசன் எம்.பி., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிவண்ணன், கண்காணிப்பு பொறியாளர் பரிதி, டி.ஆர்.ஓ., ஜீவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

