ADDED : ஆக 21, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் ஊர்வலம் நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் நகராட்சி கமிஷனர் திவ்யா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதனை தவிர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
பள்ளியின் துாதுவர் ஜானகிராமன், உதவி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள் சங்கீதா, மாரி, ரவி, சதீஷ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்திச் சென்றனர். ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் அருணாச்சலம் செய்திருந்தார்.
