தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 10, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.சி., நடுநிலைப்பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கம் (ஜே.ஆர்.சி.,) சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி நேப்பால் தெரு பள்ளியிலிருந்து துவங்கிய மாணவர்கள் பங்கேற்க ஊர்வலத்தை தொடக்கக் கல்வி டி.இ.ஓ., பாலமுருகன் துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சுபத்ரா, கடலுார் தொடக்க, நடுநிலைப்பள்ளி கூட்டமைப்பு மேலாளர் அருள்நாதன், கள்ளக்குறிச்சி ஆர்.சி., நடுநிலைப்பள்ளி நிர்வாகி அந்தோணிராஜ், தலைமை ஆசிரியர் பவுல் ரட்சகநாதன், உஷா பட்டு மாளிகை அதிபர் பெருமாள், புரவலர் ஆதிகேசவன் முன்னிலை வகித்தார்.

ஜே.ஆர்.சி. மாவட்ட இணை கன்வீனர் ஜெரோம் வரவேற்றார். மாவட்ட கன்வீனர் துரை வாழ்த்திப் பேசினார். ஜே.ஆர்.சி., மாவட்ட இணை கன்வீனர் மாயவன், மாவட்ட பயிற்றுனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ஊர்வலத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊர்வலத்தை ஜே.ஆர்.சி. மாவட்ட தலைவர் ஜான்பால், ஒன்றிய தலைவர்கள் ராஜா, தமிழரசன் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us