/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 06, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் பங்கேற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவர்களிடம், மஞ்சப்பைகளை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த பேரணியில் சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.