/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் உறுதிமொழி ஏற்பு

ADDED : ஆக 12, 2025 02:03 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
சென்னையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த 'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். எனது குடும்பத்தினர், நண்பர்களை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுத்து அறிவுரை வழங்குவேன் உள்ளிட்ட கருத்துக்களை கொண்ட உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.
நிகழ்ச்சியில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.