ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட பா.ம.க., ஆர்வம்
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட பா.ம.க., ஆர்வம்
ADDED : மார் 17, 2026 03:07 AM
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வசந்தம் கார்த்திகேயன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்திருப்பதால் வரும் தேர்தலில் பிரேமலதா ரிஷிவந்தியத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது.
ஆனால், தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ள தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., ரிஷிவந்தியத்தில் போட்டியிட விரும்புகிறது. வன்னியர் சமுதாய ஓட்டுகள் பரவலாக இருப்பதாலும், கூட்டணி பலத்தையும் எதிர்பார்த்து ரிஷிவந்தியத்தை பா.ம.க., விற்கு ஒதுக்க கூறி அ.தி.மு.க., விற்கு அழுத்தம் அளித்து வருகிறது.
