பா.ம.க., தலைவர் அன்புமணி வருகை: ரிஷிவந்தியம் வேட்பாளர் தகவல்
பா.ம.க., தலைவர் அன்புமணி வருகை: ரிஷிவந்தியம் வேட்பாளர் தகவல்
ADDED : ஏப் 09, 2026 05:23 PM

ரிஷிவந்தியம்: பா.ம.க., தலைவர் அன்புமணி மணலுார்பேட்டை மற்றும் பகண்டைகூட்ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதால் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டுமென ரிஷிவந்தியம் தொகுதி வேட்பாளர் செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ' தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் நடந்த சாராய இறப்புகள், கஞ்சா போதையால் சீரழியும் இளைஞர்கள், பெருகி வரும் பாலியல் குற்றங்கள், காவல் நிலைய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அவலங்கள் நடந்தேறியது. மேலும், கடுமையான விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் சொல்லி மாளாது.
எனவே, நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., வெற்றி பெற வேண்டிய அவசியம் குறித்து பேச பா.ம.க., தலைவர் அன்புமணி இன்று 10ம் தேதி மாலை மணலுார்பேட்டை மற்றும் பகண்டைகூட்ரோட்டிற்கு வருகிறார்.
பா.ம.க., நிர்வாகிகள், இளைஞர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., - அ.ம.மு.க., - ஐ.ஜே.கே., த.ம.மு.க., - புரட்சி பாரதம் மற்றும் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வேட்பாளர் செழியன் கூறினார்.
