/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபர் மீது போக்சோ
ADDED : செப் 08, 2025 11:20 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், நாககுப்பத்தை சேர்ந்தவர் நைனாபுலி மகன் மணிகண்டன்,23; இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிப்படைந்த சிறுமிக்கு கடந்த ஆக., மாதம் 25ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. உடன் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது இருந்தது தெரிந்தது. சிறுமியின் நலன் கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் நைனாபுலி மகன் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.