/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வடசிறுவளூரில் விஷ வண்டு கூடு அழிப்பு
/
வடசிறுவளூரில் விஷ வண்டு கூடு அழிப்பு
ADDED : ஆக 27, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே விஷ வண்டு கூட்டை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.
சங்கராபுரம் அடுத்த வடசிறுவளூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளன. அப்போது கூட்டிலிருந்து பறந்து வரும் விஷ வண்டுகள் கோவிலுக்கு வரும் பக்தர்களை கொட்டியுள்ளது. இது குறித்து கோவில் தர்மகர்த்தா சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் இரவு புகை மூலம் விஷ வண்டு கூட்டினை அழித்தனர்.