ADDED : பிப் 20, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் மனைவி கவுசல்யா 26; இவர்களுக்கு கடந்த, 2019 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர். கவுசல்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த, 11 ம் தேதி காலை, 7:00 மணிக்கு பருத்தி செடிக்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கினார். உடன் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 4:00 மணிக்கு அவர் இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

