/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வரின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்றத்தில் போலீசார்
/
முதல்வரின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்றத்தில் போலீசார்
முதல்வரின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்றத்தில் போலீசார்
முதல்வரின் தேர்தல் வாக்குறுதி ஏமாற்றத்தில் போலீசார்
ADDED : மார் 18, 2025 04:13 AM
கள்ளக்குறிச்சி: காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருப்பதால் போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின், காவலர்களுக்கான பதவி உயர்வு பணிக்கால ஆண்டுகளை குறைத்து வாக்குறுதி அளித்தார்.
அதில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தால் முதல்நிலை காவலராகவும், 12 ஆண்டுகளில் ஏட்டு, 20 ஆண்டுகளில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், 25 ஆண்டுகளில் சப் இன்ஸ்பெக்டர், 30 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என்றார்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், போலீசாருக்கான இந்த பதவி உயர்வு அறிவிப்பு இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த போலீசாருக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
ஓய்வு பெறும் நிலையில் உள்ள போலீசார் பதவி உயர்வுடன் ஓய்வு பெறுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர்களுக்கு, முதல்வர் அறிவிப்பு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் உள்ளது விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் அறிவிப்பு, வெறும் அறிவிப்பாக மட்டுமே போய்விடுமோ என்ற மனக்குமுறல் போலீசாரிடையே ஏற்பட்டுள்ளது.