ADDED : ஏப் 14, 2026 09:15 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தேர்தலையொட்டி மத்திய ஆயுத படை மற்றும் சிறப்பு காவல் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டுபதிவு செய்யவும், தேர்லை பாதுகாப்பாக நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மத்திய பிரதேசம் மாநிலம் போபால் சேர்ந்த மத்திய ஆயுத படை மற்றும் தமிழக சிறப்பு காவல் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில் மத்திய ஆயுத படை பிரிவு, தமிழக சிறப்பு காவல் படையினர் நேற்று கச்சேரி சாலை, நான்கு முனை சந்திப்பு, தியாகதுருகம் சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார், சிறப்பு காவல் படை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பிரித்தா, தர்மராஜா உட்பட போலீசார் பங்கேற்றனர்.
