ADDED : ஏப் 15, 2026 06:45 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய பிரதேசம், போபால் சேர்ந்த மத்திய ஆயுத படை மற்றும் தமிழக சிறப்பு காவல் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில் மத்திய ஆயுத படை பிரிவு, தமிழக சிறப்பு காவல் படையினர் நேற்று கச்சேரி சாலை, நான்கு முனை சந்திப்பு, தியாகதுருகம் சாலை வழியாக ஊர்வலமாக சென்றனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் உட்பட போலீசார் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வீரபாண்டி, மணம்பூண்டியில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.
அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் துவங்கி கடைவீதி வழியாக மணம்பூண்டியை வந்தடைந்தனர். அதேபோல் வீரபாண்டியில் முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடந்தது.
