/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் காவல் உதவி மையம்
/
பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் காவல் உதவி மையம்
ADDED : மார் 18, 2025 04:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாசிங் துவங்கப்பட்ட நாள் முதல் காவல் உதவி மையத்தில் போலீசார் யாரும் பணியில் இல்லாததால் பூட்டிக் கிடக்கிறது.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் காவல் உதவி மையம் கடந்த 2018ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி அப்போதைய எஸ்.பி., ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது. நகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது. நகருக்குள் நிர்வகிக்கப்பட்ட ஒருவழிச்சாலை முறைகளை சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இப்பகுதியில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது.
ஆனால் அன்று முதலே அங்கு எந்த ஒரு போலீசாரும் பணியமர்த்தப்படாமல் இருப்பதால் காவல் உதவி மையம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது.
மாவட்ட தலைநகராக மாறி பல ஆண்டுகள் ஆகியும், அங்கு போலீசாரை பணியமர்த்தி நெடுஞ்சாலை போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள காவல் உதவி மையத்தில் போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.