/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மெத்தனால் கலந்த மது அருந்தியவர் சாவு மனைவி புகாரின் பேரில் போலீஸ் விசாரணை
/
மெத்தனால் கலந்த மது அருந்தியவர் சாவு மனைவி புகாரின் பேரில் போலீஸ் விசாரணை
மெத்தனால் கலந்த மது அருந்தியவர் சாவு மனைவி புகாரின் பேரில் போலீஸ் விசாரணை
மெத்தனால் கலந்த மது அருந்தியவர் சாவு மனைவி புகாரின் பேரில் போலீஸ் விசாரணை
ADDED : மார் 18, 2025 05:38 AM

திருவெண்ணெய்நல்லுார் : மெத்தனால் கலந்த மது குடித்ததால் தனது கணவர் இறந்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,35; ஓட்டல் உரிமையாளர். இவர் கடந்த 15ம் தேதி மது அருந்திய சற்று நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடன், அவரை விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, தனியார் மருத்துவமனையில் மணிகண்டன் உடலில் மெத்தனால் கலந்திருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது எனக்கூறி அனுப்பியதாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டரிடம் மணிகண்டன் மனைவி தனலட்சுமி கூறியுள்ளார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது குறித்து மணிகண்டன் மனைவி தனலட்சுமி, தனது கணவர் உடலில் மெத்தனால் கலந்ததால் இறந்ததாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன் குடித்த மதுவில் எத்தனால் கலந்துள்ளதா அல்லது சாப்பிட்ட உணவு பாய்சனாக மாறி மணிகண்டன் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த 9ம் தேதி மேட்டுக்குப்பத்தில் மது அருந்திய மணிகண்டனின் மூத்த சகோதரியின் கணவர், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த வெங்கடேசன்,53; உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.