/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் நகை திருட்டு போலீஸ் விசாரணை
/
பெண்ணிடம் நகை திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 30, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பொ.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் மனைவி கோகிலா, 32; இவர், நேற்று முன்தினம் தனது மகனை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது மூன்றரை சவரன் நகை,1500 ரூபாய் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கோகிலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.