/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை
/
ஆற்றில் மிதந்த ஆண் உடல் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 22, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றில் ஆண் உடல் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் கங்கை அம்மன் கோவில் அருகே மணியாற்றில் உள்ள தடுப்பணையில் நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது.
சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அதில், இறந்த நபர் சங்கராபுரத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் திருப்பதி, 40; பூ கட்டும் தொழிலாளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்து, திருப்பதி இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

