ADDED : டிச 23, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:கோர்ட் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன்,55; இவர் கடந்த 20ம் தேதி காலை தனது பைக்கை கள்ளக்குறிச்சி கோர்ட் முன் நிறுத்திவிட்டு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய ஆசாமியை தேடிவருகின்றனர்.