ADDED : ஜூலை 02, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில் பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கலை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் கலைவாணன், 50; எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர். இவர் கடந்த 24ம் தேதி மதியம் தனது பைக்கை, நான்கு முனை சந்திப்பு அருகே நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது பைக் மாயமாகி இருந்தது. பைக் திருட்டு குறித்து கலைவாணன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.