/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பசுமாடு திருட்டு : போலீஸ் விசாரணை
/
பசுமாடு திருட்டு : போலீஸ் விசாரணை
ADDED : நவ 18, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே பசு மாடு திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலாம்கான், 43; விவசாயி. இவர், தனது 2 பசு மாடுகளையும் வீட்டிற்கு முன் உள்ள கொட்டகையில் கடந்த 15ம் தேதி இரவு கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது ஒரு பசு மாட்டை காணவில்லை. இதுகுறித்து அலாம்கான் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

