/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
மகனுடன் பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 07, 2025 01:30 AM
கள்ளக்குறிச்சி, : வரஞ்சரம் அருகே காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் அருள்மணி, 38; இவரது மனைவி கலைமணி,32; இந்த தம்பதிக்கு, 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அருள்மணி கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மற்றும் மகன்கள் எஸ்.ஒகையூரில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கலைமணி கடந்த 4ம் தேதி, தனது இளையமகன் கவினை,4; அழைத்து கொண்டு, அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அருள்மணி அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.