/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
/
பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : மே 21, 2025 11:49 PM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மாயமான பள்ளி மாணவியை, போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் மாதவன் மகள் சரண்யா,16; இவர், கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார்.
கோடை விடுமுறையில் கள்ளக்குறிச்சியில் தையல் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். கடந்த 19ம் தேதி காலை 8:00 மணிக்கு, வழக்கம்போல தையல் வகுப்புக்கு புறப்பட்டு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் செல்வி, வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.